அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய அவரது தந்தை எஸ்.ஏ.சி ,விஜய்யின் கடும் எதிர்ப்பால் அம்முயற்சியை கை விட்டுவிட்டதாக அறிவித்தார். நடிகர் விஜயும் அதிரடியாக தனது மன்றத்தில் உள்ள எஸ்.ஏ.சி ஆதரவாளர்களை கூண்டோடு நீக்கினார்.
உடனடியாக மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதேபோல், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார் மேலும், தனது புகைப்படம், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என்றும், மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தொடர்ந்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளோடு தொடர்ந்து தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஆலோசனையும் நடத்தி வருகிறார். எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜய்யால் நீக்கப்பட்ட தனது தீவிர ஆதர்வாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில, விஜய் ரசிகர்கள் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் இன்று நடத்திய தீவிர ஆலோசனைக்கு பின் அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க விஜய் தந்தை மீண்டும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பொங்கலுக்கு உதயமாகும் புதிய கட்சிக்கு 20புதிய மாவட்ட பொறுப்பாளர்களை எஸ்.ஏ.சி நியமித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ‘கிறிஸ்துமஸ் தினத்தன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்ததாகவும் அப்போது விஜய் தன்னை கட்டியணைத்து மோதிரம் அணிவித்ததாகவும் கூறி தனது புது நிர்வாகிகளை உற்சாகமடையச் செய்துள்ளார்.












