“100 சதவிகிதம் தியேட்டர்களில் இருக்கை அனுமதிக்க வேண்டும் என்பது தமிழக திரை உலக கோரிக்கையாக இருந்து வந்தது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் ,தயாரிப்பாளர் லலித்குமார் இருவரும் இரவில் சென்று நெடு நேரம் காத்திருந்து சந்தித்து பேசி விட்டு திரும்பினார்கள். இவர்களிடம் பழனிசாமி ரகசியமாக ஒரு கோரிக்கை வைத்ததாகவும் அப்போது சொல்லப்பட்டது.
சிலம்பரசன் டி.ஆரும் முதல்வருக்கு 100 சதவிகித இருக்கை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று காலையில் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் விரைவில் நல்ல சேதி வரும் என்பதாக கட்டியம் கூறி இருந்தார்.
இதற்கு பின்னர் இன்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து நேரு உள்ளரங்கத்தில் பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சில அதிமுக தலைவர்கள் நிபந்தனை விதித்ததாக உறுதி செய்யப்படாத தகவல் கிடைத்திருக்கிறது.