
தற்போதைய அரசியலில் சின்னம்மா சசிகலா விடுதலை சிற்சில மாற்றங்களை உருவாக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்கிரகார ஜெயிலில் அடைக்கப்பட்டவர் உடன்பிறவா தோழி என அழைக்கப்படட சசிகலா.
ஜெயலலிதா உயிருடன் இருந்ததுவரை அவரை யாருமே சந்திக்க இயலாமல் போய் விட்டது.அதற்கு காரணம் இந்த சின்னம்மாதான்.!
ஜெயலலிதாவுக்கு இணையாக மதிக்கப்பட்டவர் சசிகலா .
ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு குனிந்து வளைந்து கும்பிட்டு போட்டார்களா அந்த அளவுக்கு சசிகலாவுக்கு மண்டியிட்டு வணக்கம் போட்டவர்கள்தான் இன்றைய அதிமுக மந்திரிகள் .ஜெயலலிதா மரணத்துக்குப்பின்னர் அதிமுகவின் சூத்திரக்கயிறு சசியிடம்தான் இருந்தது.
ஜெயலலிதா மரணம் அவரை சிறைக்கு செல்லாமல் தவிர்த்து மற்றவர்களை உள்ளுக்கு தள்ளியது.
அவர்களில் சசிகலாவும் ஒருவர் . அவர் ஜனவரியில் விடுதலையாகிறார்.
அவர் விடுதலையாகி வெளியில் வந்ததும் அதிரடியாக பல மாற்றங்கள் ,நிகழக்கூடும்.
இதைப்பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது கருத்தினை கூறி இருக்கிறார்.
“சசிகலா விடுதலையாகி வந்ததும் அதிமுக ,,அம்மா திராவிடம் ,பெரியவர் திராவிடம் ,சின்னவர் திராவிடம் என நான்காக உடைந்துவிடும்” என்பதாக சொல்லியிருக்கிறார்.
அரசியலில் பெரியவர் ப.சிதம்பரம். அனுபவஸ்தர். ஓரளவாவது பலிக்காமல் போகுமா?












