கோபத்தில் வருகிற வார்த்தைகள் கோவிட் 19 ஐ விட கொடியது.
கொதிக்கும் தண்ணீர் காலம் கடந்தால் ஆறிவிடும்.ஆனால் கொட்டிய வார்த்தைகளில் இருக்கிற கனல் கோபம் தணிந்தாலும் அதனின் வெப்பம் தணியாது.
கங்கனா ரனாவத்தின் கோபமும் அத்தகையதுதான்.!
இவருக்கும் மராட்டிய மாநில அரசுக்கும் இடையில் நிலவுகிற பனிப்போரில் சிறுத்தையின் சீற்றம் இருந்து வருகிறது.
அரசமரத்தை பிடித்த சனியன் அங்கிருந்த பிள்ளையாரையும் சேர்த்து பிடித்த கதையாக இவரது பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து மாட்டிக்கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் சீற்றத்தை கங்கனாவிடம் பார்த்ததாலோ என்னவோ தலைவி படத்தில் ஜெயலலிதாவாக அவரை நடிக்க வைத்து இருக்கிறார் ஏ எல் விஜய்.
தற்போது வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில்,
“என்னை ஏன் டார்ச்சர் செய்து வருகிறார்கள்?
இந்த தேசத்திடம் இருந்து அதற்கான பதிலை எதிர்பார்க்கிறேன்.
என் மீது ஏகப்பட்ட வழக்குகள். இந்த துன்புறுத்தலைப்பற்றி நான் ஏன் பகிரங்கமாக பேசக்கூடாது? பேசக்கூடாதாம்!
உச்சநீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும்.!
மீடியவேல் நூற்றாண்டு காலத்தில் வாழ்கிறோமா என்ன?
அந்த காலத்தில்தான் ஏதாவது பேசினால் பெண்களை உயிருடன் எரித்துவிடுவார்கள் . பெண்களை பேச விட மாட்டார்கள்.”
காட்டமாக கேட்டிருக்கிறார் கங்கனா.
Why am I being mentally, emotionally and now physically tortured? I need answers from this nation…. I stood for you it’s time you stand for me …Jai Hind 🙏 pic.twitter.com/qqpojZWfCx
— Kangana Ranaut (@KanganaTeam) January 8, 2021