
தேர்தல் காலம் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளுக்கு ராகு காலத்தின் பிடி ‘நெக்’ கினை நெரிக்கத் தொடங்கிவிடும்.
அப்பத்தான் கஜானாவை காலி செய்ய நள்ளிரவு நேரத்தை நாடுவார்கள்.
எந்த கட்சி புஜபல பராக்கிரம சக்தி வாய்ந்தது என்பது காவல் துறைக்கு நன்றாகத் தெரிந்தாலும் ஆட்சியாளர்களின் மீதுள்ள கருணையினால் வெளியில் சொல்ல மாட்டார்கள்.
அருவாள் ஆறுமுகம் கூட அவர்களின் பார்வையில் கருணைக்கடவுள் கந்தன்தான்!
அது கிடக்கட்டும் தற்போதைய சூப்பர் ஸ்டார்களின் அரசியல் பிரவேசம் பற்றி முன்னொரு காலத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் முதிய தலைவர்களில் ஒருவரான மணி சங்கர அய்யர் என்ன சொல்கிறார்?
“அவர்கள் இருவரும் ( கமல், ரஜினி.) சினிமாவை அரசியல் மீடியமாக பயன்படுத்தியதில்லை. அவர்கள் இருவரும் சினிமாவில் மிகவும் அதிகமாக பேசப்பட்ட பிரபலங்கள்.
ஆனால் அவர்களது அரசியல் பார்வையை பொதுமக்கள் வெகுவாக ரசிக்கவில்லை.
இந்திப் படத்தில் அமிதாப் ,ராஜேஷ் கன்னா அளவுக்கு இந்த இருவரும் புகழ் பெற்றிருக்கவில்லை. அந்தளவுக்கு புகழ் பெற்றிருந்த அவர்களாலேயே அரசியலில் தோல்வியைத் தான் காணமுடிந்தது. அதே நிலைமைதான் தென்னிந்தியாவிலும்.!
கமல்ஹாசன் ,ரஜினிகாந்த் இருவராலும் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் இருவரும் ‘மார்ஜினல் பிளேயர்ஸ்’ . என்று சொன்னார் மணி சங்கர் அய்யர்.












