

கலப்பைமக்கள்இயக்கம்தலைவர்பி.டிசெல்வகுமார் சார்பில் அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் 1008 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டனர் ..
.பின் மாணவிகளின் கரகாட்டம் சிலம்பாட்டம் ,கிராமிய கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது …இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை கஸ்தூரி ,இமான் அண்ணாச்சி ,காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் விஜய் வசந்த் ,ஆகியோர் கலந்து கொண்டனர் ….
கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து நடிகை கஸ்தூரி பேசியதாவது :
“கன்னியாகுமரியில் மலையும் கடலும் சேர்ந்த இந்த இடத்தில இப்படி ஒரு அற்புத விழா நடப்பது ஆனந்தமாக உள்ளது …இந்த விழாவில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து 14 மணி நேரம் பயணம் செய்து இங்கு வந்தேன் ,இந்த கொரோனா சூழலுக்கு பிறகு இங்கு இருக்கும் பெண்கள் நடனமாடி தமிழ் கலாச்சாரத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்ததை பார்க்கும் போது கலப்பை மக்கள் இயக்க தலைவர் செல்வகுமாருக்கு கலை உலகில் மட்டுமில்லை அவர் பிறந்த குமரி மண்ணிலும் பெண்கள் ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன் … இந்த காட்டுப்பகுதியியில் இவ்வளவு பெண்கள் கூட்டத்தை கூட்ட செல்வகுமாரால் மட்டுமே முடியும் ……………..
கல்லூரி மாணவிகளின் நடனம் பார்த்து கொண்டிருந்த என்னையும் குத்தாட்டம் போட வைத்தது ..இவ்வளவு தலைவர்களை வரவழைத்து வேற்றுமையை மறந்து ஒற்றுமையை ஏற்படுத்த கலப்பை மக்கள் இயக்கத்தால் தான் முடியும்” என்று பேசினார் …
பின்னர் விஜய் வசந்த் பேசியதாவது : ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு கலப்பை மக்கள் இயக்கம் எடுக்கும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் …கடந்த ஆண்டு நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் என் தந்தை கலந்து கொண்டு சிறப்பித்தார் …கலப்பை மக்கள் இயக்கம் எப்போது அழைத்தாலும் நான் வருவேன்” என்று பேசினார் ..
இமான் அண்ணாச்சி பேசியதாவது : கொரோனா என்னும் கொடிய சூழலுக்கு பிறகு மக்களையும் குழந்தைகளையும் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது . செல்வகுமார் கலைத்துறையில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக உதவி செய்வார் ..நேற்று அவர் கட்டிக்கொடுத்த 500 அடி மலை உச்சியில் இருக்கும் குபேர மூலிகை மண்டபத்தை பார்த்து வியந்துபோனேன்” என்றார்.
இந்நிகழ்வில் அன்னை வேளாங்கன்னி நிறுவன தலைவர் பீட்டர் ஜேசுதாஸ் ,கலப்பை குமரி மாவட்ட தலைவர் சிவா பன்னீர்செல்வன் ,கலப்பை செயலாளர் ஜான் கிறிஸ்டோபர் ,கலப்பை துணை தலைவர் ஜெபர்சன் ,கலப்பை சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.












