“என்னப்பா ஈசா …எங்க காதல் மன்னன் சிலம்பரசனை இப்படி புலம்பவிட்டுட்டியே ” என்று விவரம் தெரியாதவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் என்பது உலகு அறிந்த உண்மை.
அதை பலர் பலவிதமாக கொண்டாடிவிட்டார்கள்.
சிலம்பரசன்.டி .ஆரும் ஒருவிதமாக கொண்டாடிவிட்டார்.
நடிகர் மகத் வீட்டு நாயோ என்னவோ அதனுடன் உரையாடல் நடத்தியதில் தன்னுடைய உள்ளத்து உணர்வினை வெளிக்கொணர்ந்து விட்டார்.
அதுமட்டுமல்ல அந்த நாயின் பெயர் கோகோ .அதை ‘தங்கமே” என்று கொஞ்சியதையும் மறக்கமுடியாது.
அது யாரையோ குறிப்பிடுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் வளர்ப்பு நாயுடன் அவர் பேசுகிறார்.
அதில், “நீ ஒரு பெண்ணினம்.. நீ வளர்ந்து ஒரு ஆண் இனத்தை பார்த்து பழக வேண்டும். அதனுடன் உறவு உண்டாக வேண்டும். ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் முதலில் எனக்கு திருமணம் ஆக வேண்டும். நான் கல்யாணம் ஆகாமல் இருக்கிறேன் எனும் போது நீ ஜாலியாக இருக்கலாம் என்று நினைக்க முடியாது.
பிறகு என் மீது கோபித்துக்கொள்ள கூடாது. அதனால் நீ செய்ய வேண்டியதெல்லாம், இரவு முழுவதும் அமர்ந்து எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அப்போது தான் உனக்கு நடக்க வேண்டியதும் நடக்கும். என் கஷ்டம் உனக்கு புரியுதா? என்ன அப்படி பார்க்கிறாய் ..
எனக்கு திருமணம் ஆகிடும்னு சொல்ல வர்றியா? ஆகாதுனு சொல்ல வர்றியா?. ஓ.. ஆகிடும்னு சொல்றியா?” எனப் புலம்புகிறார். இறுதியில் ‘தங்கம்’ என அந்த செல்ல நாயுடன் சிம்பு கொஞ்சுவார்..
. காதலர் தினத்தன்று சிம்புவின் முன்னாள் காதலியும் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நடிகையுமான நயன்தாராவை விக்னேஷ் சிவன், “தங்கமே…உன்னை காதலுடன் எப்போதும் காதலித்து கொண்டிருக்க விரும்புகிறேன் “என குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவை சமீபகாலமாக விக்னேஷ் சிவன் “தங்கமே” என்று செல்லமாக அழைப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram












