“கவர்ச்சி ஆட்டக்காரி “என்று மத்திய பிரதேச முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சுக்தேவ்பான்ஸே சொன்னதுக்கு நடிகை கங்கனா ரனாவத் நேரடியாக பதில் சொல்லாமல் முக்கியமான பாலிவுட் நடிகைகளை சந்திக்கு இழுத்து சண்டைக்கு ஆயத்தமாகி இருக்கிறார்.
கங்கனா ரனாவத் மராட்டிய அரசுக்கு எதிரான ஸ்டான்ட் எடுத்திருப்பவர் . அந்த அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியையும் விட்டு வைப்பதில்லை. மோடிக்கு ஆதரவான கருத்துகளை அவ்வப்போது தனது பதிவிட்டு வருகிறவர். விவசாயிகள் மாதக்கணக்கில் நடத்திய அறப்போராட்டத்தையும் கடுமையாக சாடியவர்தான் தலைவி நடிகை.
தேர்தலுக்கு முன்னதாகவே தலைவி படத்தை திரையிடும் முயற்சியில் இயக்குனர் விஜய் ஈடுபட்டிருக்கிற நிலையில் துணிச்சலாக தன்னுடைய கருத்துகளை பதிவு செய்கிற கில்லாடி நடிகை.
“கவர்ச்சி ஆட்டக்காரி “என்பதாக சுக்தேவ் சொன்னதும் கொதிநிலையை அடைந்து விட்டார் கங்கனா.!
இதற்கான பதிலை நேரடியாக சொல்ல வேண்டியதுதானே ?
“முட்டாளுக்கு கூட தெரியும் , தீபிகா படுகோன் ,கத்ரினா கைப் ,அலியா ஆகிய முன்னணி நடிகைகள் மாதிரி கங்கனா இல்லை என்பது.! நான் ஒருவள்தான் அயிட்டம் டான்ஸ் ஆடாதவள்.!ஆட மறுப்பவள் .பெரிய நடிகர்களான ‘கான்’ ‘குமார்’ போன்றவர்களுடன் ஆட மறுத்ததால் எனக்கெதிரான கேங் உருவானதுதான் உண்மை.!
நான் ராஜ புத்திர பெண்.அந்த மாதிரியான ஆட்டமெல்லாம் போட மாட்டேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.