சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த சந்திரமுகி சக்கைப்போடு போட்டது தெரிந்ததே.
இந்த படத்தில் ஜோதிகா,நயன்தாரா ,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு எழுதியிருப்பதாகவும் அதில் ராகவா லாரன்ஸ் நடிக்கப்போவதாகவும் முன்னொரு காலத்தில் செய்தி வெளியாகியது. அதன் பின்னர் எந்த ஒரு செய்தியும் வெளியாகாததால் படம் கைவிட்டது என்கிற செய்தியை யாரோ கசிய விட்டிருக்கிறார்கள்.
ஒரு இடத்தில் அணையில் கீறல் விட்டால் என்னவாகும்? உடைந்தே போகும் ! அந்த அளவுக்கு செய்தி பரவியது.
நல்லவேளை !
அப்படியெல்லாம் கைவிடப்படவில்லை என்பதாக ராகவா லாரன்ஸ் மறுத்திருக்கிறார்.
“யாரோ வதந்தியை கிளப்பியிருக்கிறார்.நம்பாதீர்கள் ” என்று சொல்கிறார் ராகவா.