எங்கேயாவது புதையல் கிடைக்காதா என்கிற ஆசை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது. அவனுக்கு 15 லட்சம் ரூபாய் இலவசமாக அரசு வழங்கும் என்று சொன்னால் கற்பனையில் எங்கெல்லாம் போய் வருவான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
ஆனால் நடிகை காஜல் அகர்வாலுக்கு 2000 கோடி கிடைத்தால் என்ன செய்வார் ?
பங்களாக்கள் ,ஃபாரின் கார்கள் ,பிஸினஸ்கள் ..இப்படி….இப்படி எவ்வளவோ ?
இப்படி சொல்வார் என்றுதானே எதிர்பார்ப்போம்.
அதான் இல்லை.!
“அந்த பணத்துக்கு கோவிட் 19 தடுப்பு மருந்து வாங்கி ஒவ்வொருவருக்கும் கொடுப்பேன். உலகம் அமைதிக்கு திரும்பும் ,எல்லோரும் அமைதியாக வேலையைப் பார்ப்பார்கள். இந்த பதிலானது மிஸ் வேர்ல்டு போட்டியில் சொல்லக்கூடியதாக இருக்காது.நான் உடனடியாக ,உணர்வுப்பூர்வமாக சொல்வதாகும்.”என்றார் .
அவர் தற்போது ‘மொசக்கல்லு’ என்கிற படத்தை எதிர்பார்த்து இருக்கிறார். அந்த படம் 2600 கோடி ரூபா மோசடி பற்றிய படமாகும். 50 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது.