
கொரானா தொற்று அதிகமாகி வருகிற நிலையில் மக்கள் மத்தியில் ஒருவகையான பீதி ஏற்பட்டிருக்கிறது.
மீண்டும் லாக்டவுனில் மாட்டிக்கொள்வோம் என்கிற அச்சம்தான் அது.!
இதனால் அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நடிவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முகக்கவசம் கட்டாயம்.இல்லையெனில் அபராதம் என்கிற கட்டாயத்துக்கு வந்து இருக்கிறார்கள்.
திண்டுக்கல்லில் நடந்த விஜய்சேதுபதி சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ரசிகர்கள் திரண்டதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி அதிகாரிகள் படக்குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறார்கள்.
முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு தமிழக அரசின் உத்தரவின்படி,சுகாதாரத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தியபோது அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று கொண்டிருந்தனர்.
அங்கு பொன்ராம் இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
இதனால் ரசிகர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் நெருக்கமாக நின்று அப் படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கொரோனா பரவும் வகையில் கூட்டம் கூடுவதற்கு காரணமாக இருந்ததாக, சினிமா படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இம்மாதிரியான இடங்களில் சமூக இடைவெளி என்பது இயலாத ஒன்று. மக்கள் கட்டுப்படுத்த காவலர்கள் முன்வந்திருக்க வேண்டும்.












