
தேசிய அளவில் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கங்கனா ரனாவத்.
இவருக்கு நாளை 23 ஆம் தேதி பிறந்த நாள் . பிறந்த நாள் பரிசாக மத்திய அரசு விருது வழங்கி கவரவித்ததாகவே கருதலாம்.
அதைப்போல இயக்குநர் ஏ.எல்.விஜய் தலைவி படத்தின் முதல் போஸ்டர், முன்னோட்டம் ஆகியவைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கனா தன்னுடைய பதிவில் தலைவி படத்தின் சில படங்களை வெளியிட்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் இளமைக்காலத்து காட்சிகளுக்காக 20 கிலோ எடை குறைத்ததை குறிப்பிட்டவர் இழந்த எடையை சில மாதங்களில் திரும்பப் பெற்றதாகவும் சொல்லியிருக்கிறார்.அந்த படைத்தன சில படங்களை வெளியிட்டிருக்கிறார்.












