ரெண்டரை வருஷம் ஆகிருச்சு.!
ஷாருக் கான் படத்தை அட்லீ டைரக்ட் பண்ணப்போறார்ங்கிற அறிவிப்பு வந்து.!
இப்ப வரைக்கும் அதைப்பத்தின பேச்சையே காணோம். ஷாருக் அவருடைய ‘பதான்’ படத்திலே மும்முரமா இருக்கிறார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் டைரக்ட் பண்றார் .
இப்ப உறுதி செய்யப்படாத தகவல் உலா வருது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து அட்லீ படம் ஆரம்பமாகும் .அடுத்த வருஷம் ஷாருக் ரெண்டு படத்தை ரிலீஸ் பண்ணணும்கிற ஐடியாவில் இருக்கிறாராம் . இந்த படத்தின் மற்ற டெக்னீஷியன்ஸ் பற்றிய அறிவிப்பு சீக்கிரமே வரும்னு சொல்றாங்க.
வந்தா சரி.!