Monday, March 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போவேன்!” -தயாரிப்பாளரை மிரட்டிய டைரக்டர்.!

admin by admin
March 29, 2021
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கதையில்தான் தலையை வெட்டுவதைப்போல காட்டுவார்கள். அதை நிஜத்திலும் காட்டிவிடுவேன் என்று தயாரிப்பாளரை இயக்குநர் -நடிகர் ஒருவர் மிரட்டிய கதை கோடம்பாக்கத்தில் நடந்திருக்கிறது.

You might also like

‘சேயோன் ‘படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்! என்ன கேரக்டர் தெரியுமா?

ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!

‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!

இயக்குநர் சரவணசக்தி என்பவர் பில்லா பாண்டி ,நாயகன் போன்ற சில படங்களை இயக்கியவர். குட்டிப்புலி,தர்மதுரை ,கொடிவீரன் ,ஈஸ்வரன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருப்பவர். இவர் மீது பிரபல தயாரிப்பாளரும் ,தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான சிங்காரவேலன் கதை திருட்டு புகார் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து சிங்காரவேலன் தரப்பிலிருந்து வெளியான அறிக்கை பின்வருமாறு:

“கொரானா ஊரடங்கின் போது சரவண சக்தி என்னிடம் பண உதவி கேட்டார். அதற்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்கு திரைக்கதை அமைத்து தாருங்கள். அதற்காக
50,000 ம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறினேன். அதற்கு சரவண சக்தி சம்மதித்தார்

“எல்லாம் அவன் செயல்”“பைரவா” படங்கள் பாணியில் மருத்துவ கல்லூரி மாணவியை அந்த கல்லூரி உரிமையாளர், மற்றும் தாளாளர் இருவரும் கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள் .அந்த பெண் நாயகனின் தங்கை நாயகன் சாதாரண ஆள்.

எனவே ஆக்க்ஷன் அடிதடி என்று இல்லாமல் தன்னுடைய புத்திசாலிதனத்தால் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை கொலை செய்து பழி வாங்குகிறான்

சட்டத்தாலும், நீதியாலும் அவனை நெருங்க கூட முடியாது என்கிற ஒருவரி கதை . இதற்கு திரைக்கதை அமைத்து அதற்கு” எங்க குலசாமி” என தலைப்பு வைத்து தயார் செய்து தாருங்கள் என கூறி பணமும் அனுப்பி வைத்தேன்.

ஆனால்  என்னிடம் அவர் ஒப்புக்கொண்டபடி திரைக்கதை அமைத்து தரவில்லை அதன் பின்னர் நான் கூறிய ஒருவரி கதையை எனக்கு தெரிந்த வேறு ஒரு குழுவிடம் கொடுத்து திரைக்கதை அமைக்க சொல்லி அதனை வைத்து தற்போது படம் தயாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்து வருகிறது

படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை உருவாக்கியுள்ளது கதையின் கருவும் விவாத பொருளானது இந்த நிலையில் 27.03.2021 அன்று சாலிக்கிராமத்தில் உள்ள என் அலுவலகத்திற்கு சில அடியாட்களுடன் மதுபோதையில் வந்த சரவண சக்தி ஊழியர்களை அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

அலுவலக ஊழியர்கள் அவர்களுக்கு தெரியாமல் விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வருவதற்கு முன்பு “சிங்காரவேலனை கொலை செய்து தலையுடன் தான் செல்வேன்” என்று கொக்கரித்துக் கொண்டிருந்த சரவண சக்தி வகையறா காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் பின்னங்கால் பிடரி தெறிக்க அருணாச்சலம் சாலையில் ஓட்டம் பிடித்ததை சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

காவல்நிலையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தபோது சரவண சக்தி அலைபேசியை எடுக்கவில்லை இன்று மீண்டும் தொடர்பு கொண்டபோது தான் மதுரையில் இருப்பதாக கூறியவரிடம் நாளை ( 29.03.2021) காலை 10 மணிக்கு கண்டிப்பாக விசாரணைக்கு காவல்நிலையம் வரவேண்டும் என்ற ஆய்வாளரின் உத்தரவுப்படி வர உள்ளார் சரவண சக்தி.

இவர் ஏதோ என் மீது புகார் கொடுக்கப்போவது போன்று நாளை (29.03.2021) காலை பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

சரவண சக்தி ஏற்கனவே இயக்கி வெளியான நாயகன் படம்,” ஸ்பீடு” என்கிற ஹாலிவுட் படத்தின் உல்டாவாகும் “பில்லா பாண்டி” படத்தின் கதையும் மூர்த்தி என்பவர் எழுதியதாகும் அவரது மேற்பார்வையில் இவர் இயக்கிய படமாகும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்

இதன்மூலம் சரவண சக்தியால் சொந்தமாக கதை தயார் செய்து படம் இயக்கும் திறமை இல்லாதவர் அடுத்தவன் கதை இரவல் வாங்கியோ அல்லது திருடியோ படம் இயக்குபவர் என்பதை புரிந்துகொள்ளலாம்.

எங்க குலசாமி என்கிற படத்தின் கதை என்னுடையது என்பதையும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது இதனால் அவரது பெயருக்கு எந்த களங்கத்தையும் என் திரைக்கதை ஏற்படுத்தாது என்று உறுதி கொடுக்கப்பட்டு நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் அவர்களிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என் தரப்பு நியாயங்களை, அதற்குரிய ஆவணங்களை முன்வைத்து வெற்றிபெறுவேன் என்பதை உறுதிபட தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: எங்ககுலசாமி விவகாரம்சரவணசக்திதயாரிப்பாளர் சிங்காரவேலன்தலைவெட்டப்படும்மிரட்டல்
admin

admin

Related Posts

‘சேயோன் ‘படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்! என்ன கேரக்டர் தெரியுமா?
News

‘சேயோன் ‘படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்! என்ன கேரக்டர் தெரியுமா?

by admin
March 16, 2026
ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!
News

ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!

by admin
March 16, 2026
‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!
News

‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!

by admin
March 16, 2026
பூமாலையே தோள் சேரவா….திரிஷா சொல்லும் ‘ரகசிய’ செய்தி?
News

பூமாலையே தோள் சேரவா….திரிஷா சொல்லும் ‘ரகசிய’ செய்தி?

by admin
March 15, 2026
சின்னத்திரை முதல்  சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்!
News

சின்னத்திரை முதல் சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்!

by admin
March 15, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?