“வணக்கமும் நன்றியும்!ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும்.
இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது
டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் எனவே….”
பார்த்திபனால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல் போய்விட்டது நண்பர்களே!
என்ன செய்ய முடியும்?டிவிட்டரில் ரொம்பவும் கவலைப்பட்டிருக்கிறார் .
சரி ,
அவரது ஓட்டு திமுகவுக்கா,அதிமுகவுக்கா,அல்லது மக்கள் நீதி மய்யத்துக்கா ?
எந்த கட்சிக்கு என்பது தெரியாது.
ஆனாலும் ஒரு ஓட்டு வேஸ்ட் ஆகிவிட்டதே!
அப்படியெல்லாம் வேஸ்ட் ஆகி இருக்காது. அவருக்கு பதிலாக வேறு எவனாவது அந்த வாக்கினை அழுத்தமா போட்டிருப்பான்.ஆனானப்பட்ட சிவாஜி கணேசன் ஓட்டையே ஒரு காலத்திலே போட்டவாய்ங்களாக்கும் நம்மாளுங்க.இது ஜனநாயக நாடு.!
அதனால் பார்த்திபன் டோன்ட் ஒர்ரி !