நடிகை ரைசா பிக்பாஸ் வழியாக பேமஸ் ஆனவர்.
இவர் பிரபல அழகியல் டாக்டர் பைரவி செந்திலிடம் சிகிச்சைக்காக சென்றபோது தன்னுடைய எதிர்ப்பையும் மீறி வேறு சிகிச்சை செய்து விட்டார் .அவருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை பீஸ் கொடுத்தேன். என் முகம் வீங்கிவிட்டது என சொல்லி தனக்கு நட்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் பைரவி செந்தில் தரவேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
இதற்கு பைரவி செந்தில் தனது வக்கீல் வழியாக பதில் அனுப்பியிருக்கிறார்.
“சிகிச்சைக்குறித்து தப்பான தகவல்களை ரைசா பரப்பியிருக்கிறார். இதனால் தனக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது.நாடகம் ஆடுகிறார். பயப்படக்கூடிய அளவுக்கு பக்க விளைவுகள் இல்லை. இயற்கையாகவே குணமடைந்து விடும்.
இன்னும் 3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மான நட்ட வழக்கு தொடரப்படும் என்று டாகடர் பைரவி செந்தில் கூறியிருக்கிறார்.