
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2012-ல் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா,
இப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெரிய தொகை வாங்கினார்
இந்நிலையில் இலியானா ஊடகம் ஒன்றில், “கடந்த சில வருடங்களாக என்னைப்பற்றி சில வதந்திகள் சுற்றி வருகின்றன. நான் கர்ப்பமாக இருந்தேன், கருக்கலைப்பு செய்தேன் என்றெல்லாம் சொன்னார்கள்.
உண்மையில் இது போன்ற விஷயங்களை ஏன் எழுதினார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது. இது வினோதமானது,மேலும்,நான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், உயிர் பிழைத்ததாகவும், அந்த செய்தியை என் வேலைக்காரி உறுதிப்படுத்தியிருந்தார் என்றும் கூட வதந்தி பரப்பினார்கள்.
ஆனால் எனக்கு வேலைக்காரியே இல்லை, நான் தற்கொலைக்கு முயற்சிக்கவும் இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன். இதுபோன்ற தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது
” என மிகவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.












