
நீரடித்து நீர் விலகுவதில்லை என்பார்கள்.
அண்ணன் மு.க.அழகிரி.தம்பி மு.க.ஸ்டாலின் . ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். இருவரிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்டு.
இதை பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் தேடிய இடைத்தரகர்களை இல்லாமல் இல்லை. அண்ணன் தம்பியை ஒன்று சேர விடாமல் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். இருவரிடையில் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தது அவர்களுக்கு வசதியாகப்போனது.
ஆனால் குடும்பத்தில் இருந்த நல்லவர்களின் துணையினால் அண்ணன் தம்பியிடையில் இருந்த கருத்து வேறுபாடு கலைந்தது.
“அழகிரி என் அண்ணன் !”என்றார் ஸ்டாலின்.
“ஸ்டாலின் என் தம்பி” என்றார் அழகிரி.
ஆட்சிக்கு வரவே முடியாது என்று விசுவாமித்திர கோபத்துடன் சொன்ன அழகிரி இன்று தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
“முதலமைச்சராக நாளை என் தம்பி மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பதில் பெருமை அடைகிறேன். முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்று அகம் மகிழ்ந்து வாழ்த்தியிருக்கிறார்.












