
அண்மையில் மாரடைப்பினால் மரணம் அடைந்தவர் இயக்குநர் ,கதாசிரியர் ,பத்திரிகையாளர் டென்னிஸ் ஜோசப் .சிறந்த படங்களைத் தந்தவர்.
இவரது புதுடெல்லி என்கிற படம் நடிகர் மம்மூட்டிக்கு பெயரும் புகழும் தேடித்தந்தது..
ஜிகே என்கிற ஜி.கிருஷ்ணமூர்த்தி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் .இந்திய அளவில் பேசப்பட்டது அந்த கேரக்டர் .பிளாக் பஸ்டர் படம் புதுடெல்லி.
அந்த படத்தின் ரீ மேக் உரிமையை வாங்க வேண்டும் என்கிற ஆசை நம்ம சூப்பர் ஸ்டாருக்கு.!
இதற்காக டென்னிஸ் ஜோசப்பை தனியாக சந்தித்து பேச விரும்பினார் ரஜினிகாந்த்.
சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார் டென்னிஸ் .
ரிசப்ஷனில் இருந்து ஒரு கால் டென்னிஸுக்கு . “சார், உங்களை ஒரு விவிஐபி சந்திக்க வந்திருக்கிறார். அனுப்பலாமா?”
அந்த விவிஐபி யார் என்பதை சொல்லத் தேவையில்லை, நம்ம சூப்பர் ஸ்டாரேதான்.!
இருவரும் மகிழ்ச்சியுடன் சந்தித்தனர் .தன்னுடைய நோக்கத்தை சொன்னார் ரஜினி.
“மன்னிக்கவும். ரீ மேக் உரிமைகளை முன்னதாகவே விற்றுவிட்டோம்” என்கிற பதில்தான் கிடைத்தது.
வாழ்க்கையில் பல வெற்றி தோல்விகளைக் கண்டவர் சூப்பர் ஸ்டார். இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டார்.ஆனாலும் வருத்தம் இருந்தது.












