கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காக பிரதமர் மோடி ஆயிரக்கணக்கான கோடியை ஒதுக்கினார். புனித கங்கை என்று போற்றப்படுகின்ற கங்கையில் பிணங்களை தள்ளுவது ,கழிவு நீரை கலக்கச்செய்வது என்பது சற்றும் குறைந்தபாடாக இல்லை.
தற்போது கொரானாவினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய இடமில்லாமல் ,புதைக்கவும் இடம் இல்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி கங்கையில் தள்ளிவிடுவதுதான்.
தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
“ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன.”