நடிகர்,இயக்குநர் பார்த்திபனின் (அவர் மட்டுமே நடித்த) வித்தியாசமான முயற்சியில் வெளியான ‘ஒத்த செருப்பு’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் .
பலரது பாராட்டுகளைப்பெற்ற இப் படம் ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது ., தேசிய விருது பெற்றது . தற்போது ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை இந்திய அளவில் பாலிவுட்டுக்கும், உலக அளவில் ஹாலிவுட்டுக்கும் எடுத்துச்செல்ல பார்த்திபன் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பார்த்திபன் தனது டுவிட்டரில் :” என் தமிழ் அழகு.என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ். தட்டுத்தடுமாறி ஆங்கிலமும்,தப்பித்தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு.இந்தி முஜே நஹி மாலும் ஹே! ஆனால், ‘ஒத்த செருப்பு’ இந்தியும், விரைவில் ஆங்கிலமும் பேச இருப்பதால்,இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு பர்சனல் அசிஸ்டன்ட் (ஆண் ,பெண் பாகுபாடில்லை) தேவைப்படுகிறார்.
ஈடுபாட்டுடன் பணிப்புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.
பார்த்திபனின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்ட நிலையில் தற்போது பார்த்திபன் தனது டுவிட்டரில் ” பி.ஏ. வேணும்னு கேட்டால், பணமே வேணாம்,வேலை செய்றேன்னு நிறைய விண்ணப்பங்கள்.அன்புக்கு நன்றி. வந்தவை அனைத்தும் சிறப்பாயினும் ஒன்றை தேர்ந்தெடுப்பது என் இயலாமை.மன்னிக்க. இன்னும் 3 தினங்களுக்குள் வரும் விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படும். நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.