
அந்த ஆங்கில இணைய பத்திரிகையில் வெளியாகி இருந்த செய்தியை பார்த்தபோது ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது.
“இப்படியெல்லாமா நடந்திருக்கிறது?” என்கிற அவஸ்தையும் சேர்ந்து கொண்டது.
நடிகர் விஜய்யின் வெறித்தனமான கேரள ரசிகர் நவ்பால் பாபு ஜான் என்பவர் வெளியிட்டிருக்கிற நிகழ்வுகளை படித்தபோது இப்படியெல்லாமா நடந்திருக்கிறது என்கிற ஆச்சரியமும் ,அதிர்ச்சியும் ஏற்படாமல் இல்லை. இவர் விஜய்க்கு நெருக்கமானவர் என்கிற தகவலும் இருக்கிறது.
நவ்பால் பாபுஜான் என்பவரை திரையுலக பிரபலங்களுக்கு மிகவும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அவர் சென்னை வாசியாக சிறிது காலம் இருந்திருக்கிறார். அவர் 12 ஆண்டுகால விஜய்யின் பரம விசுவாசி. அவர் சோசியல் மீடியாவில் பிரபலம் என்கிறார்கள்.
விஜய் ரசிகர் குரூப்களுக்கு இவர் அட்மினாகவும் இருந்திருக்கிறார். அஜித்தை திட்டுகிற டேட்டா பேஸ்- புக் குரூப்களுக்கும் இவர்தான் அட்மின்.! இதனால் இவரை ‘பிரெய்ன்’ என அழைத்திருக்கிறார்கள் விஜய்யின் மக்கள் இயக்க பிரமுகர்கள்.! பெரிய மூளைக்காரன்தான்யா! இல்லாவிட்டால் சோசியல் மீடியாக்களில் விஜய்க்கு ஆதரவாகவும் மற்ற நடிகர்களுக்கு விரோதமாகவும் ட்ரோல் பண்ணிவந்தவர்களை,அட்மின்களை விஜய்யிடம் அழைத்து சென்றிருக்க முடியுமா?
2017 -ஆம் ஆண்டு ‘டப்மாஸ் மேனியா ‘ என்று நடத்தியிருக்கிறார் இந்த நவ்பால் பாபு ஜான்.
அந்த டப்மாஸ் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனுப்பிய ட்ரோல் சினிமா என்கிற வீடியோக்களை இவரே நேரடியாக விஜய்யிடம் காட்டியதாகவும் சொல்லியிருக்கிறார். இவரது ‘சோசியல் மீடியா சேவைகளுக்காக’ விஜய் அதிகமாக அன்பளிப்பு கொடுத்து உற் சாகப்படுத்தியதாகவும் சொல்கிறார்.
சரி தற்போது இவருக்கு என்ன பிரச்னை?
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல்வாதி புஸ்ஸி ஆனந்த் கைப்பற்றிய பின்னர் நவ்பாலின் முக்கியத்துவம் சரேலென பள்ளத்தில் பாய்ந்து விட்டது.
ஆணானப்பட்ட அப்பா எஸ் ஏ.சந்திரசேகரையே புறம் தள்ளி மூலையில் உட்காரவைத்து விட்ட புஸ்ஸியாரினால் இந்த பிசுக்கோத்துவை வீழ்த்துவது மலையை வீழ்த்துகிற காரியமா என்ன?
செலிபிரிட்டி மேனேஜராக இருந்தவரை கேரளத்துக்கே பேக் பண்ணி விட்டார்கள். விஎம் ஐ என்றழைக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சோசியல் மீடியா பொறுப்பு புஸ்ஸி ஆனந்த் கைக்கு சென்று விட்டது.
புஸ்ஸி ஆனந்தின் அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள விஜய்யின் மக்கள் இயக்க சோசியல் மீடியா பக்கங்களை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டை சொல்கிறார் பிரெய்ன்.
ரஜினி ,அஜித் ஆகியோரை ட்ரோல் பண்ணனும் என்கிற உத்திரவு இருப்பதாக சொல்கிறார் நவ்பால்.
இது போக விஜய்யை சந்திக்க மற்றும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவென ரூ.3000 முதல் ரூ.5000 வரை வசூல் செய்யப்படுவதாகவும் என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தவறான வழிகளில் அழைத்து செல்லப்படுகிறார். இவைகளை சொன்னதால் எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.என்பது இவரது முக்கிய பரபரப்பு குற்றச்சாட்டு.
இவர் சொல்வதெல்லாம் உண்மையோ, பொய்யோ… யாமறியோம் .
ஆனால் பிற நடிகர்களை இழிவு படுத்துகிற சோசியல் மீடியா சண்டைகளுக்கு விஜய் துணையாக இருக்கிறார் என்பதை மட்டும் நம்பமுடியவில்லை.!












