அடேங்கப்பா…உறவு வழிகளை கேட்டால் தலை சுற்றுகிறது. இந்திய அளவில் இவர்களது வம்சாவழிதான் டாப் ஒன்னாக இருக்க முடியும்.
இதனால்தான் இந்த குடும்பத்தின் மீது சட்டம் பாய முடியவில்லை.அரசு செல்வாக்கு எந்த வகையிலாவது இவர்களை காப்பாற்றி விடுகிறது.
பத்மா சேஷாத்திரி உயர்கல்வி கற்றுத்தருகிற பி.எஸ்.பி.பி .பள்ளி. கே.கே.நகரில் பிரபலம். இந்த பள்ளியில் சீட்டு வாங்குவதற்கு உயர் அதிகார வட்டங்களை பிடித்தாலும் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பதில்லை.
டொனேசனும் அதிகம் என்கிறார்கள். இந்த பள்ளியின் நிர்வாகம் ஒய்.ஜி.பி.குடும்ப உறுப்பினர்கள் வசம் இருக்கிறது.
இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் ஏ.ஆர்.ரகுமான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி. பிஜேபி பிரபலம்.இந்த பள்ளியில்தான் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்திருக்கிறார் ஆசிரியர் ராஜகோபால் .தற்போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். பள்ளி நிர்வாகம் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்பதாக முன்னர் ஒரு செய்தி கிடைத்தது.
இந்த பள்ளியின் மீது தமிழக அரசினால் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.பிஜேபியின் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக இருக்கிறபோது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?
பள்ளி பருவ காலத்தில் ரகுமான் படித்தது பயங்கரமான அனுபவம்.எந்த பள்ளியில் படித்தேன் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
அப்பா சேகர் இறந்து விடவே பள்ளிக்கு பீஸ் கட்ட முடியவில்லை. பீஸ் கட்டவில்லை என்றால் தேர்வு எழுதமுடியாது என்று ரகுமானை பள்ளி நிர்வாகம் அனுப்பி விட்டது.
நிர்வாகத்திடம் தன் மகனின் நிலைமையை எடுத்து சொல்லி சலுகை காட்ட சொன்ன ரகுமானின் அம்மாவிடம் பள்ளி நிர்வாகம் என்ன சொன்னதாம் தெரியுமா?
“கோடம்பாக்கம் பாலம் அருகே நின்று கையேந்துங்கள் “என சொல்லியிருக்கிறது.
இதை எல்லாம் கேட்கிறபோது கோபம் எரிமலையென கனல் கக்குகிறது.
சரி சங்கதிக்கு வருவோம் .
காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர்.
பார்த்தசாரதியின் சகோதரி வசுந்தராதேவி அந்தகாலத்து புகழ்பெற்ற சினிமா நடிகை.
வசுந்தராதேவியின் மகள்தான் தமிழில் இருந்து பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய வைஜயந்திமாலா. இவருடைய மகன் சுசிந்தீராவும் நடிகர்தான்.
ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா ராஜலட்சுமி, சென்னையின் புகழ்பெற்ற பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர். பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக குமுதம், இந்து பத்திரிகைகளில் பணிபுரிந்த பத்திரிகையாளர் இவர்.
ராஜலட்சுமியின் பாட்டனார் ரங்கச்சாரிதான் இந்தியாவில் சென்ஸார் போர்டை கொண்டுவந்தவர்.
ராஜலட்சுமியின் சகோதரர் கே.பாலாஜி, புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.
பாலாஜியின் மகன் சுரேஷ்பாலாஜியும் அப்பாவை போலவே புகழ்பெற்ற தயாரிப்பாளர்.
கே.பாலாஜியின் மகள் சுசித்ரா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.
மோகன்லாலின் மகன் பிரணவ்வும் இப்போது ஹீரோவாகி இருக்கிறார். கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இவர்.
மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா.
இவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணந்துக்கொண்டு லதாரஜினிகாந்த் ஆனார். சென்னையின் புகழ்பெற்ற ஆஸ்ரம் பள்ளியின் நிறுவனர் இவர்.
லதாவின் மகள் ஐஸ்வர்யா, இளம் நடிகர் தனுஷை மணந்தார். ஐஸ்வர்யாவும் சினிமா இயக்குகிறார்.
லதா ரஜினிகாந்தின் இன்னொரு மகள் செளந்தர்யாவும் தயாரிப்பு, இயக்கம் என்று திரைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்.
தனுஷின் அண்ணன், செல்வராகவன், தமிழகத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலியை மணந்திருக்கிறார்.
லதாரஜினிகாந்தின் தம்பி ரவிராகவேந்திராவும் நடிகர்.
ராகவேந்திராவின் மகன் அனிருத், இப்போது பிரபலமான இசையமைப்பாளர்.
அனிருத்தின் சித்தி மகன் ரிஷிகேஷும் நடிகரே. ரிஷிகேஷின் அப்பா எஸ்.வி.ரமணன், அந்தகாலத்தில் ரஜினியை பேட்டியெடுத்து தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பிய பத்திரிகையாளர்.
எஸ்.வி.ரமணின் அப்பா கே.சுப்பிரமணியம், தமிழ் சினிமாவின் ஆரம்பகால இயக்குநர்களில் முக்கியமானவர்.
கே.சுப்பிரமணியத்தின் மகள் புகழ்பெற்ற நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம்.
கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர் இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ ராம்ஜி.
கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளான பாமாவின் மகன்தான் நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர்.
ரகுராம் மாஸ்டரின் மனைவி கிரிஜாவும் நடன இயக்குநர்தான்.
கிரிஜாவின் சகோதரிகள் ஜெயந்தி, கலா, பிருந்தா ஆகியோரும் நடன இயக்குநர்களே.
ரகுராம் – கிரிஜா தம்பதியினரின் மகள் நடிகை காயத்ரி ரகுராம். இப்போது பாஜகவில் முக்கியப் பிரமுகராக இருக்கிறார்.
ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, ஜெமினி – சாவித்திரி தம்பதியரின் மகள் டாக்டர் சாமூண்டிஸ்வரியின் மகன் அருணை மணந்திருக்கிறார்.தற்போது விவாகரத்து ஆகிவிட்டது.
தலை சுத்துதா?
மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் என்றுகூட தோன்றுமே?
ரஜினியை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு வரச்சொல்லி வற்புறுத்தியது எந்தப் பின்னணி என்று புரிகிறதா?
இதெல்லாம் நமக்கு வெளிப்படையாக தெரிந்த லிங்க். வெளிப்படையாக தெரியாமல் படர்ந்த வலை எவ்வளவோ?
வைஜயந்திமாலா, தன்னுடைய சுயசரிதையில் தங்கள் குடும்பத்தை மைசூர் பரம்பரை என்கிறார். புகழ்பெற்ற அறிஞர்களும், அர்ச்சகர்களும் இவர்களது முன்னோர்களாம். இவர்களது முன்னோர் வந்தால் மைசூர் அரசர்களே எழுந்து நின்று வரவேற்பார்களாம். ஒருவேளை ஜெயலலிதாவும் இதே குடும்பத்தின் வேறொரு கிளையில் உதித்தவரோ என்னமோ?