
“ராமர் ,ஜானகி ( சீதை ) பேர்ல நெலம் வச்சிருக்கே ,எங்கேய்யா அவங்களோட ஆதார் கார்டு?கொண்டு வாய்யா!”
“அவங்க ரெண்டு பேரும் கடவுளுங்க. அவங்களுக்கு தினமும் அர்ச்சனை செய்ற குருக்கள்தான் நானு.! கடவுளுக்கு ஏதுங்க ஆதார் கார்டு?”
“அப்டியா , ஆதார் கார்டு இல்லையா ,அப்ப அவங்க பேர்ல இருக்கிற ஏழு ஹெக்டேர் நிலத்தோட பத்திரப்பதிவ கேன்சல் பண்றேன். ஆதார் கார்டு இல்லேன்னா சாமிக்கும் இந்த கதிதான். அதான் எங்க சட்டம்” என்கிறார் டிவிசனல் மாஜிஸ்திரேட் சவுரப் சுக்லா.!
உத்திரபிரதேசத்தில் இருக்கிற பண்டா என்கிற ஊரில் நடந்திருக்கிற உண்மை சம்பவம் இது.!
அரசாங்கம் கோதுமை கொள்முதல் செய்கிற நிலையத்துக்கு கோவில் குருக்கள் மகந்த் ராம்குமார் தாஸ் 100 குவிண்டால் கோதுமையை விற்பதற்காக சென்றிருக்கிறார். அந்த கோதுமை ராம் -ஜானகி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விளைந்தது.
ராம்குமார்தாஸ் தான் அந்த கோவிலை நிர்வாகம் செய்கிறவர். குருக்களாகவும் இருக்கிறார் .
அப்போதுதான் யார் பெயரில் அந்த நிலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ ,அவர்களுடைய ஆதார் கார்டை காட்டச்சொல்லியிருக்கிறார்கள் அரசு அதிகாரிகள்.!
ராம்- ஜானகி பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு சொந்தமான நிலம்.
அப்போதுதான் கடவுளுக்கு ஏதுங்க ஆதார் கார்டு என்று குருக்கள் கேட்க அதற்கு மாஜிஸ்திரேட் சொன்ன பதிலைத்தான் நீங்கள் இங்கு படித்தீர்கள்!












