தனுஷ் நடிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி.
தொடர்ந்து பிரபலமான இவர் அப்படியே பாலிவுட்டிலும்,நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, சூர்மா,தப்பட் ஆகிய தொடர் வெற்றிகளின் மூலம் இந்தியில் தனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்துக்கொண்டுள்ளார் .
தற்போது இந்தியில் ராஷ்மி ராக்கெட்,ஹசீன் தில்ரூபா, ஜன கண மன ஆகிய படங்களிலும்,தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக, அனபெல் சுப்ரமணியம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை டாப்ஸி வெளிநாட்டு பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் இவர்களின் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில், மத்தியாஸ் போவை காதலித்து வருவதை ஒப்புக்கொண்டார்.வெளிப்படையா
அவர் தனது திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் . அவர் கூறியுள்ளதாவது,”சினிமாத்துறை சார்ந்த ஒருவரை என் வாழ்க்கை துணையாக்க விரும்பவில்லை.
எனது நிஜ வாழ்க்கையை சினிமாவுடன் இணைக்க விரும்பவில்லை.
எனது தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னும் சில விஷயங்களை அடைய வேண்டும் என நினைக்கிறேன். அப்படி அடைந்து விட்டால், வருடத்துக்கு ஐந்து, ஆறு படங்களில் நடிப்பதற்கு பதிலாக, இரண்டு மூன்று படங்கள் என குறைத்துக் கொள்வேன். அப்போதுதான் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அர்ப்பணிக்க நேரம் கிடைக்கும். அந்த சமயத்தில் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்.”என்கிறார்.