
சில நேரங்களில் விளையாட்டும் விபரீதமாகிவிடுவது உண்டு.!
அது தற்போது நடிகை ஐஸ்வரியலட்சுமி விஜயத்தில் நடந்திருக்கிறது.
விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்சன்’படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர்தான் ஐஸ்வர்யா லட்சுமி.
தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும் இணைந்திருக்கிறார். மலையாளத்தை போலவே தமிழிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்கிற ஆசை ஐஸ்வர்யா லட்சுமிக்கு அதிகமாகவே உள்ளது.
சமூக வலைதளங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். , கேரள பாணியில் சேலைக்கட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்
அந்தப் புகைப்படங்களைப்பார்த்த நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத், ஐஸ்வர்யா லட்சுமியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிவிட்டார் .அதுதான் இருவருக்குமே ஆப்பு ஆகிவிட்டது.
புகழ்ந்து சொன்னதை வைத்துக்கொண்டு ,ஷ்ரத்தா ஸ்ரீ நாத்திடம், “நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா” என ஜாலியாக ஐஸ்வர்யா லட்சுமி பதிவிட, அவ்வளவு தான்.அடுத்த சில நிமிடங்களில் இவர்களது உரையாடல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி விட்டது..,
நெட்டிசன்கள் பலரும்,ஐஸ்வர்யா லட்சுமியின் இன்ஸ்ட்டா பக்கத்தில், ‘அவனா நீ’? என்றும், ‘என்ன ரெண்டுபேரும் கலயாணம் பண்ண போறீங்களா? அது சரியா வராது. நாம் இருவரும் திருமணம் செய்தால் அது மிக சிறப்பாக இருக்கும் என போட்டிபோட்டுக்கொண்டு ஐஸ்வர்யா லட்சுமியை கலாய்த்து வருகின்றனர்.
தேவைதானா கண்மணிகளா ?












