நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில நடிகர்கள் ‘வந்து -சென்று’ இருக்கலாம்.!
ஆனால் நான்காண்டுகளுக்கு மேலாக இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவனுடன் , நயன்தாரா!
இருவரும் இணைந்து வாழ்கிறார்கள்.!
அவர்களுக்கு தேவை திருமணம் என்கிற அங்கீகாரம்.
அது எப்போது கிடைக்கும்?
கொரானா காலம் முடிந்ததும் கிடைக்குமா?
விக்னேஷ் சிவன் இப்போதுதான் மனம் திறந்திருக்கிறார்.!
“எனக்கு ஊடகத்தினர் இதுவரை 22 தடவை திருமணம் செய்து விட்டார்கள்.”என்கிற விக்கி தன்னுடைய திருமணம் பற்றி சொல்லியிருக்கிறார்.
“திருமணத்துக்காக போதிய பணம் தேவை. அதை நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இப்ப கொரானா காலமாக இருக்கிறது . காத்திருக்கிறோம் .அது முடியட்டும் “என்பதாக சொன்னவர் மேலும் பல தகவலை தந்திருக்கிறார்.
“நயன் தனது வேலையை கண் போல கருதுகிறார்.அவருக்கு தொழில் பக்தி அதிகம். ஒரு தடவை நானே சொல்லியிருக்கிறேன் வேடிக்கையாக! எங்களுக்கு காதலிப்பது எப்போது போரடிக்குதோ ,அப்போது கல்யாணம் பண்ணிக்கொள்வோம் என்பதாக.!
நயனுக்கு தொழில் பக்தி அதிகம். தற்போது நாங்கள் எங்கள் தொழிலில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம். அஜித் சார் அடிக்கடி சொல்வார் நமது வேளையில் அதிகம் கவனம் செலுத்தி படங்கள் சிறப்புடன் இருந்து விட்டால் அதுவே நல்ல பப்ளிசிட்டி என்று.
நாம் நமது வேலையை தெய்வமாக நினைக்கவேண்டும்.அது பேசும் நம்மைப்பற்றி என்பார் அஜித் சார்.!
அதையே கண்ணென கருதி கடுமையுடன் உழைத்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா” என்று விண்ணளவுக்கு தன்னுடைய காதலியைப்பற்றி பேசுகிறார் விக்னேஷ் சிவன்,.