
நரேன், பன்முக நடிகர். அதிக அளவில் படங்களில் நடித்திருந்தாலும் அடையாளம் காட்டியது ‘ஆடுகளம் ‘தான்.!
தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தின் வில்லனாக பகத் பாசில் நடிக்கப்போவதாக தகவல் இருக்கிறது. இதே நேரத்தில் விஜய்சேதுபதிக்கும் முக்கிய கேரக்டர் இருப்பதாக சொல்கிறார்கள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எதைப்பற்றியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.!
இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த ‘கைதி ‘படத்தில் நரேன் முக்கிய வேடத்தை செய்திருந்தார்.
தற்போது கமல்ஹாசனுடன் விக்ரம் படத்திலும் நடிக்கிறார்.
இதைப்பற்றி நரேன் சொல்வதென்ன?
” இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படம் முடித்த பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன். விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன்.
அப்போது தான் அவர் சொன்னார், உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் உண்டு என்பதை.
உலக நாயகன் கமல்ஹாசன் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னைப்போன்ற நடிகர்களின் கனவு,
அந்த கனவு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன். இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.அவருடன் நடிக்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். என்கிறார் நெகிழ்ச்சியாக.












