ஹைதராபாத் விஷால்31 படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர் விஷால் துணை ஜனாதிபதி .வெங்கையா நாயுடுவை மரியாதை நிமித்தமாக ஐதராபாத் ஜூப்ளிஹில்ஸ் துணை ஜனாதிபதி வீட்டில் சந்தித்தார்.அப்போது அரசியல் பேசினார்களா என்பது தெரியாது.
தெரிந்தவர்களின் பிறந்தநாள் போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு சால்வை பூங்கொத்து வழங்குவதை தவிர்த்து அவர்களின் பெயரில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவளித்து வாழ்த்துச்செய்தி அனுப்புவது விஷாலின் வழக்கம்.
அதேபோன்று சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பிறந்தநாள் வாழ்த்து நினைவாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்கியது குறிப்பிடத்தக்கது. அருகில் அவரது தங்கை ஐஸ்வர்யா.