
சின்ன துரும்பு இருந்தாலே போதும் கங்கனாவுக்கு.! புரட்டி எடுத்து விடுவார்.
கடப்பாரையே கிடைத்து இருக்கிறபோது அஸ்திவாரத்தை பெயர்த்து விடமாட்டாரா என்ன?
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படங்களை தயாரித்து கைதாகிவிட்டார் என்கிற செய்தி கங்கனாவுக்கு புல்டோசர் மாதிரி.!
“நான் சொன்னேன்ல, சினிமா தொழில் ஒரு சாக்கடையாகிவிட்டது என்று!
அதை நான் ஏன் சொன்னேன்னு இப்ப தெரியுதா?மின்னுவதெல்லாம் பொன் இல்லைங்க. என்னுடைய’ டிக்கு வெட்ஸ் ஷெரு ‘என்கிற படத்தில் இந்த புள்ளிவுட்டின் (பாலிவுட் ) அவலங்களை அம்பலப்படுத்தப்போகிறேன் “என்கிறார் கங்கனா ரனாவத் .












