
அரசியலுக்கு நேரடியாக வருகிற எண்ணம் நடிகர் விஜய்க்கு கிடையாது என்பதால் தன்னுடைய இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை முதல் அமைச்சராக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள். திமுக ,அதிமுக ,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை எதிர்ப்பதற்கு இவர்தான் சரியான ஆள் என்பதாக கருதுகிறார்கள்.
இதனால்தான் உயிரோடு இருப்பவர்களுக்கு கட்சி ஆபீசில் சிலை வைக்கமாட்டார்கள் என்பது மரபு.அதை உடைத்தெறிந்து சூசகமாக இயக்க ஆபிசில் விஜய்யின் சிலையை திறந்து வைத்து புஸ்ஸியாரின் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடி விட்டார்கள். 
இதனால்தான் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பிறந்த நாளையும் விஜய் இயக்கத்தினர் வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள்.
சுவரொட்டிகளிலும் விஜய்யை விட புஸ்ஸியாரின் முகங்களையே பெரிய அளவில் பிரதானப்படுத்தியிருந்தார்கள். புஸ்ஸியார் உண்மையிலேயே அரசியலில் அனுபவம் உள்ளவர். ஒரு முறை பாண்டிச்சேரி எம்.எல்.ஏ .வாகவும் இருந்திருக்கிறார்.
ஆகவே அவரால் அரசியலை வெற்றிகரமாக தன்னைவிட முன்னெடுத்துச்செல்ல முடியும் என்பதாக விஜய் கருதுகிறார் என்கிறார்கள். எப்படி அறிஞர் அண்ணாவை முன்னிறுத்தி திமுகவை வளர்த்தார்களோ அதைப்போல புஸ்ஸியாரை முன்னிலைப்படுத்தி விஜய் இயக்கத்தை வளர்த்து விடலாம் .இவரை அரசியலிலும் தன்னை சினிமாவிலும் முதன்மைப்படுத்த முடியும் என்பது விஜய் போடுகிற கணக்கு என்கிறார்கள்.
இன்னும் இரண்டொரு படங்களுடன் ரஜினி ரிட்டையர் ஆகிவிடுவார் என்று விஜய் நம்புவதாக சொல்கிறார்கள்.
விஜய் தன்னுடைய இயக்கத்தினரை நேரடியாக சந்தித்துப்பேசி நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாகிவிட்டது. புஸ்ஸியார்தான் சந்தித்து வருகிறார் என்பதிலிருந்தே ஆனந்தின் முக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.
தன்னுடைய பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தவர்கள் அனுப்பவேண்டிய அழைப்பிதழ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது பொதுச்செயலாளரின் உத்திரவாம்.
அன்பிற்குரிய மக்கள் இயக்க உறவுகளுக்கு வணக்கம்
இயக்கத்தின் செயல்பாடுகள் கடந்த 1 ஆண்டுகளாக நாம் மேற்கொண்ட பணிகள் தொடர்ந்து நாம் செயல்பட வேண்டிய முறைகள் குறித்து ஆலோசனை பெறவும் அகில இந்திய பொதுச் செயலாளர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் வருகின்ற (july.24) சனிக்கிழமை இரவு புறப்பட்டு ஞாயிறு (july.25) காலை 9 மணிக்கு சென்னை பனையூர் அலுவலகம் செல்ல உள்ளதால்… வருகை தர விருப்பமுள்ளவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வருகை தர உள்ள மாவட்ட மாநகர.. நகர ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் விபரத்தை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் எத்தனை பேர் எந்த வாகனங்களில் வருகிறீர்கள் என்கிற விபரத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன் நமது வருகை அதன் விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டி உள்ளதால் எனக்கு நாளை இரவு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி… வணக்கம். அன்புடன்…
இரா.விஜய்சரவணன் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் /தலைவர்
இந்த அழைப்பிதழில் விஜய்யின் பெயர் எங்கேயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












