கொரோனாதொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் வேணு அரவிந்துக்கு மூளையில் இருந்த கட்டியை மருத்துவர்கள் அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கிய ’பகல் நிலவு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான வேணு அரவிந்த், அதனை அடுத்து கமல்ஹாசனின் ’அந்த ஒரு நிமிடம்’ சிவாஜி கணேசன் நடித்த ’படிக்காத பண்ணையார்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சபாஷ் சரியானப்போட்டி என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.அதேபோல்1990ல் பொதிகையில் ஒளிபரப்பாகிய ’நிலாப்பெண்’ என்ற தொலைக்காட்சி தொடரில் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’அலையோசை’ ’ராசி மூலம்’ ’ராகுல் வம்சம்’ ’காதல் பகடை’, ’காசளவு நேசம்’ அக்னி சக்தி, அலைகள், இந்திரன் சந்திரன், ஜனணி, வாழ்க்கை, செல்வி, உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்தது ’வாணி ராணி’ தொடர் தான் நடிகை ராதிகா நடித்த வாணி, ராணி தொடரில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த வேணு அரவிந்த் அந்த தொடர் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்தவர்.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அதற்கான சிகிச்சை பெற்று, அதில் இருந்து மீண்டார்.இந்நிலையில், கொரோனா தாக்குதலுக்கு பிறகு அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருக்கு மூளையில் கட்டி உருவாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது மூளையில் உள்ள கட்டியை மருத்துவர்கள் அகற்றினார், இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பின்பு வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, அவரது உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.