
எந்த நேரத்தில் எந்த கதாநாயகி எப்படி மாறுவார் ,எந்த மாதிரியான டிரஸ்ஸில் வந்து கலக்குவார் என்பது தெரியாமல் இருக்கிறது.
சர்ச்சைக்குரிய கருத்துகளை சவுக்கடி மாதிரி சொல்லக்கூடியவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் ஜெயலலிதா பயோபிக்கில் நடித்து வரவிருக்கிற ‘தலைவி ‘படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
கருத்துகள் கான்ட்ரவர்சியாக சொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் சார்பட்டா பரம்பரை படத்தில் இல்லாத கான்ட்ரவர்ஸியையா இயக்குநர் விஜய் சொல்லிவிடப்போகிறார் ‘தலைவி’யில்?
நேரடியாகவே அதிமுக ,எம்.ஜி.ஆர் .கருணாநிதி என கட்சியுடன் காட்சிகளை அமைத்து சொல்லாடல் அமைந்திருந்தது. இயக்குநர் பா.ரஞ்சித் சொல்லியதைப்போல விஜய் சொல்லியிருப்பாரா ?
விஷயத்துக்கு வருவோம்.
கங்கனா ரனாவத் பச்சை நிறத்தில் பவளக்கொடி மாதிரி பட்டு உடலைக்காட்டி போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.
“ப்பே …..!”












