
“நா ஒன்னும் தண்ணி அடிச்சிட்டு கார ஒட்டல .வீணா வதந்தியை கெளப்பாதீங்க. மட்டமான வதந்தி.” என்கிற யாஷிகா ஆனந்த் “இன்னும் 5 மாதகாலம் படுத்த படுக்கைதான். எந்திரிச்சி நிக்கவே முடியாது என்கிறபோது நடக்க மட்டும் முடியுமா என்ன ,கடவுள் தண்டிச்சிட்டான்” என்கிறார் கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் .
கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடந்த கார் விபத்தில் யாஷிகாவின் நண்பி விபத்து நடந்த இடத்திலேயே பலியாகிப்போனார் .
யாஷிகாவுக்கு இடுப்பில் கடுமையான அடி .இடுப்பு எலும்பில் பல இடங்கள் சேதம்.
“உடல் வலி உள்ளத்து வலி ரெண்டும் சேந்து என்னை கொன்று விட்டன. நான் இழந்ததை எதற்கும் ஒப்பிட முடியாது”என்று கண்ணீர் விடுகிறார் யாஷிகா ஆனந்த் .
சொல்வதைப்பார்த்தால் இனி சினிமா வாய்ப்பு கிடையாது என்பதையல்லவா உணர்த்துகிறது.அட ராமா!












