
தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா
தற்போது ஞானவேல் என்பவர் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கிறார்.
அதேபோல் சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே, அருண் விஜய் நடிப்பில் ஓ மை டாக் ,ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய 4 படங்களை தயாரித்துள்ளார்.
இப்படங்களின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில்,கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இந்த நான்கு திரைப்படங்களையும் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட சூர்யா முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ செப்டம்பர் மாதமும், ‘உடன்பிறப்பே’ அக்டோபர் மாதமும், ‘ஜெய் பீம்’ நவம்பர் மாதமும், ‘ஓ மை டாக்’ டிசம்பர் மாதமும் வெளியாக உள்ளன.
சூர்யாவின் முடிவு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.தியேட்டர்கள் மூடிக்கிடக்கிற காலத்தில் படங்களை எப்படியாவது வெளியிட வேண்டியது தயாரிப்பாளர்களின் கடமை.அதனால்தான் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள்
ஏற்கனவே நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் ,சூரரைப்போற்று ஆகிய படங்களும் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.இவ்விவகாரம் குறித்து விரைவில் திரையரங்கு உரிமையாளர்கள் முக்கிய முடிவு ஒன்றை அறிவிக்க உள்ளனராம்.












