ஷமிதா ஷெட்டி.
ஆபாச படங்கள் எடுத்து துட்டுப் பார்த்த ராஜ்குந்த்ராவின் கொழுந்தியாள் .அதாவது ஷில்பா ஷெட்டியின் ரத்தத்தின் ரத்தம்.
ஓடிடி தளத்தில் கரண் ஜோகர் நடத்துகிற பிக் பாஸின் கண்டஸ்டண்ட்.
ஓ ..ஓடிடி தளத்திலும் பிக்பாஸ் நடக்குதா?
சரி சிக்கல் என்ன?
ஷமிதா ஷெட்டிக்கு பெருங்குடல் அழற்சி நோய். கோலிடிஸ் என்பார்கள்.
இந்த நோய்க்கு உணவு கட்டுப்பாடுகள் இருக்கிறது. இந்த நோய் கண்டவர்களுக்கு அந்த பகுதியில் எரிகிற உணர்வு இருக்கும்.இதனால் சாதாரண உணவு போதாது.
இதனால் உணவு விஷயத்தில் அடிக்கடி சக போட்டியாளர்களுடன் ஷமிதா சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். ராஜ் குந்த்ரா ஜெயிலில் இருப்பதால் இந்த நடிகையின் செயல்கள் மீது பார்வையாளர்களின் கவனம் அதிகமாக இருக்கிறது.