தன்னை சூப்பர் மாடல் என்பதாக தானே சொல்லிக்கொண்டு ஆபாசப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறவர் மீரா மிதுன்.
பிக்பாஸில் சேரன் தன்னை அங்கே கைய வெச்சுட்டார்னு சொல்லி அழிச்சாட்டம் ஆடியவர் இந்த பெண்.
நுனி நாக்கு ஆங்கிலம் இவரது அத்து மீறலுக்கு பக்கவாத்தியம். அடிக்கடி ஒன்றிய ,மாநில அரசுகளுக்கு ஆலோசனை சொல்வார் இந்த வனிதாமணி.
தமிழக உச்சநடிகர்களையும் குடும்பத்தினரையும் தரை லோக்கலுக்கு விமர்சனம் செய்து கேவலப்படுத்தியவர்தான் இந்த மீரா மிதுன்.
அண்மையில் பட்டியலின மக்களை படு கேவலமாக பேசியிருந்தார்.இதனால் மக்களிடையே கோபமும் கொந்தளிப்பும் இருந்தது.
உடனே கேரளத்துக்கு ஓடி விட்டார். புகார்கள் வந்ததால் இவரைத்தேடி தமிழகப்போலீஸார் கேரளா சென்றனர்.
விவரத்தை சொன்னார்கள்.
அவ்வளவுதான் ஒரே ஆட்டம். கதறல்.
“என்னை கைது செய்து விடுவீர்களா ,உங்களில் எவரது கையாவது என்ன தொட்டால் கத்தியால் குத்தி செத்து விடுவேன். ( பணிப்பெண்ணைப் பார்த்து ) அடியேய் !அந்த கத்தியை எடுத்திட்டுவாடி ! சி.எம்.ஸ்டாலின் ,பிரதமர் மோடி !” என்றெல்லாம் கத்திக் கதறி ஆர்ப்பாட்டம் பண்ணியவரை தமிழக போலீஸ் அமைதியுடன் தூக்கிவிட்டது.
மீரா மிதுன் கேரளாவில் கைது. பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதால் மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்தனர்.
கைதுக்கு முன் மீரா வெளியிட்ட வீடியோ..#MeeraMitun pic.twitter.com/hzQKT1zKrH
— Anandakumar Murugesan (@AnandAathiraa) August 14, 2021