
இந்தியா அவரது பூர்வீகம்.பெயர் ஜூலியன் பாரதி. கனடிய வர்த்தகரின் மகன் ,வயது 27.இவருக்கு 16 வயதாக இருந்தபோது பஞ்சாபிலிருந்து ருஷியாவுக்கு புலம் பெயர்ந்து சென்றுவிட்டார். பண வர்த்தகம் .அதாவது ஆங்கிலத்தில் பாங்கர் என்று சொல்லுவார்கள்.
ஜூலியனுக்கு பிரிட்டிஷ் நடிகை எலிசபெத் ஹர்லி மீது ஒரு க்ரஷ் .தாக்கம், காதல் ,ஆசை .
2014 -ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எய்ட்ஸ் பவுண்டேசன் நடத்திய நிதி திரட்டுகிற ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒரு காரணம் இருக்கிறது.!
“நான் நடிகை எலிசபெத் ஹர்லியை முத்தமிட ஆசைப்படுகிறேன். ஆசை நிறைவேறுமானால் 50 ஆயிரம் பிரிட்டிஷ் பவுன்ட்ஸ் வழங்குவேன் “என்று ஏல குழுவினரிடம் தெரிவித்திருந்தார்.
அவர்களும் 49 வயதான அந்த நடிகையிடம் அந்த வாலிபரின் விருப்பத்தை தெரிவித்து சம்மதமும் வாங்கி விட்டார்கள்.
குறிப்பிட்ட விழா நிகழ்ச்சியில் அந்த நடிகையை ஆசையுடன் முத்தமிட்டு ஜென்ம சாபல்யம் அடைந்தார். இந்திய மதிப்புக்கு 48 லட்சத்து 95 ஆயிரத்து 825 ரூபாய் ஆகும்.
“அப்பா! எலிசபெத் ஹர்லியை மேடையில் முத்தமிட்டு அவளது எச்சலின் சிறிதளவு சுவையை அனுபவித்து விட்டேன்.” என்று தன்னுடைய தந்தையிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான் .
“எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்த முத்தம் அது. எனது மனைவியின் ஒப்புதல் பெற்ற பிறகே நடிகையை முத்தமிட்டேன்” என்றார் ஜூலியன்.
மனைவியும்” கோ ஹெட் !” என உற்சாகப்படுத்தினாராம்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமய்யா !












