
யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளாகி ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். மாமல்லபுரம் அருகில் நடந்தது அந்த துயரச்சம்பவம்.!
கவர்ச்சி நடிகையான யாஷிகாவும் நண்பிகளும் பாண்டிச்சேரியில் பார்ட்டி முடிந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோதுதான் விபத்து நடந்திருக்கிறது.
காரை ஓட்டி வந்தவர் யாஷிகா. பலியானது அவரது சிநேகிதி பவானி.! எத்தகைய நிலையில் யாஷிகா காரை ஓட்டி வந்திருக்கிறார் என்பது தெரியவில்லை. யாஷிகாவுக்கு பலத்த காயம். ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முந்தைய நிலைக்கு வருவதற்கு வெகு நாள் ஆகலாம். யாஷிகா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த விபத்து பற்றி இப்போதுதான் வாய் திறந்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
“நான் இப்போது அனுபவிக்கும் வேதனையை சொல்ல இயலாது. ஆயுள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழவேண்டிய நிலையில் இருக்கிறேன்.
என்னுடைய அன்பு சிநேகிதியை எடுத்துக்கொண்டதற்காக கடவுளை நிந்திப்பதா ,அல்லது நான் உயிருடன் இருப்பதற்காக நன்றியைச் சொல்வதா? பவானி , உன்னை இழந்து நிற்கிறேன்.நீ என்னை மன்னிக்கமாட்டாய் என்பது தெரியும்.உன்னுடைய குடும்பத்தினருக்கு மிகப்பெரிய கொடூரத்தை செய்து இருக்கிறேன். அவர்கள் என்னை மன்னிப்பார்களா?” என்றெல்லாம் புலம்பி இருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பதேது ?












