
தலைவி படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இவர் இன்று சென்னைக்கு வந்தார் .வருகிற வெள்ளிக்கிழமை தலைவி படம் வெளியாவதை முன்னிட்டு இன்று மாலையில் சென்னை ஹயாத் ( அண்ணா சாலை ) நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்கிறது.
இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை இயக்குநர் ஏ.எல் .விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதற்காக தமிழகத்தலைநகரம் வந்திருக்கிற பாலிவுட் நடிகை இன்று காலையில் கடற்கரையில் இருக்கிற அமரர் எம்.ஜி.ஆர் ,கலைஞர் கருணாநிதி , ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செய்தார். இவருடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் சென்றிருந்தார்.












