
என்னன்னு சொல்றது? திமிரா,இல்ல கோவமா ,அல்லது பழி வாங்கலா ?
சில நாட்களுக்கு முன்னாடி நடிகர் சித்தார்த் செத்துட்டதா அவரு படத்தப் போட்டு ஆர்.ஐ.பி.ன்னு அஞ்சலி செலுத்தியிருந்தாங்க டிவிட்டர்ல சில பேர்.
நடிகர் சித்தார்த் தன்னுடைய பக்கங்களில் பிஜேபி ,மற்றும் மோடி இவங்களை கிரிட்டிஸைஸ் பண்ணி கருத்துகளை சொல்லுவாரு.
அது பிடிக்காம பிஜேபியின் ஆதரவாளர்கள் அவரை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க. இதில அத்துமீறலும் உண்டு.அப்படி அத்து மீறுனதுதான் அஞ்சலி செய்தி.!
நீட் தேர்தல் பற்றிய விவாதம் இப்ப சூடா நடந்துகிட்டு இருக்கு.

“பொய் சொன்னால் அவர் சாமியாராக இருந்தாலும் தலைவராக இருந்தாலும் பளார் அறைதான்”னு ஒருதடவை சித்தார்த் டிவீட் பண்ணிருந்தார்.
இதற்கு ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் இப்படியாக பதிவிட்டிருக்கிறார்
“நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி இன்று நீட் நடக்கிறது பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் – @Actor_Siddharth ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க ? #நீட்_ரத்து_எங்கடா”
இந்த பதிவுக்கு சித்தார்த் சொல்லியிருக்கிற பதில் கீழே….
“மூதேவி…..கோவமோ ,சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா நீ போயி கேளு. இல்ல உங்க அப்பனை போயி கேளு. நான் என் வேலையைதாண்டா பார்க்கிறேன். பொறுக்கி பசங்க.இதுவே வேலையா போச்சு .டிவிட்டரை டாய்லட்டா ஆக்கி வச்சிருக்கிங்க . வேற எங்க மலரும் ?எழவு ! இதில சொல்லட்டா ?”
இது நடிகரின் பதிவு .இப்படியாக ஒரு சண்டை ஜாலியா போகுதுங்க!












