
அர்யானா சயீத் அதிர்ஷ்டவசமாக ஆப்கானில் இருந்து தப்பி இஸ்தான்புல் சென்றடைந்தவர். இவர் பிரபலமான பாப் பாடகி.
இவர் தாலிபான்களின் கையில் சிக்கியிருந்தால் ?
குதறி இருப்பார்கள்.
நினைத்துப்பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.
சண்டை நடந்து கொண்டிருந்தபோது தப்பித்து செல்ல முயற்சி செய்தார்.ஆகஸ்ட் 14 -ம் தேதி விமானத்தில் அமர்ந்து விட்டார் .ஆனால் விமானம் டேக் ஆப் ஆகவில்லை.இதனால் அச்சமுடன் இறங்கி பதுங்கி இருக்க வேண்டியதாயிற்று. ஆகஸ்ட் 19 -ம் தேதிதான் விமானத்தில் தப்பி செல்ல முடிந்தது.
ஆனால் தன்னை மணந்துகொள்ள இருந்தவரிடம் மிகவும் உறுதிபட ” என்னை தாலிபான்கள் உயிருடன் பிடித்துவிடுவார்கள் என்கிற நிலை வந்தால் சற்றும் தயங்காமல் என்னை சுட்டு விடு. ! ஹஸிப் ..என் தலையைப் பார்த்து சுட்டு விடு”
இந்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டால்?
“அதற்கும் ஒரு மாற்று திட்டம் இருந்தது. அருகில் சிறுமியிடம் யாரும் விசாரித்தால் நான் உன்னுடைய அம்மா என்று சொல்லிவிடு ! பெயரை கேட்டால் பிரெஸ்தா என்று சொல். அர்யானா என்கிற உண்மைப்பெயரை சொல்லிவிடாதே “என்று நாடகமாட திட்டமிட்டிருந்திருக்கிறார் பாப் பாடகி.!
தப்பி சென்ற நிம்மதியுடன் விமானத்தில் தூங்கியதை பாருங்கள் படத்தில்.!












