
“ஏன்னா …நியூஸ் கேள்விப்பட்டேளோ ?”
ஆத்துக்காரி காப்பி ஆத்தின்டே கேக்கிறா. பேப்பர்ல அப்படி என்னத்தப் பார்த்தாளோ ..?அவள எதித்துப் பேசற தெம்பும் திராணியும் நேக்கு இல்ல.
“சொன்னாத்தானே தெரியும்.!”
“அதானே,, ஒரசின்டு படுக்கறத தவிர வேரென்ன தெரியும்? “முணுமுணுத்தபடியே சத்தமா சொல்றா “காஜல் கர்ப்பமா இருக்காளாம் .அக்டொபர்ல மேரேஜ் ..இந்த செப்டம்பர்ல கேரிங் .ஆத்துக்காரன் கிச்சுலு கெட்டிக்காரன்.” ஏளனமா என்னை பார்த்தபடியே காப்பி டபாராவை நீட்டினாள்.
“அதுக்கு என்ன ..அவா கோடீஸ்வரா !பெத்துக்கறா!இப்ப எதுக்கு அத கெளப்பறே ? அவள புக் பண்ணின்ட புரொட்யூஸர்னா கவலைப்படனும். இந்தியன் 2 படம் இழுபறியா கெடக்கிறதால காஜல் டேட்ட வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு டிசைட் பண்ணி இப்படி பண்ணின்டா போலிருக்கு மத்தவா படம் பத்தி தெரியல.”
“நன்னா பேசறவோய் ! நாம்ம மேரேஜ் பண்ணி எத்தனை வருசங்கானும் ஆச்சு.?”
அவளுக்கு வாய் ஜாஸ்தியா போச்சு. நம்ம பட்ஜெட்டை பார்க்கவேணாமா ? ச்சே ஆண்மைக்கு இழுக்கு.!
For the last few days Kajal has been away from social media. She must be in the bliss of hearing the news about her pregnancy and hence this silence on social media as per the opinion of many.












