
விஜய் மக்கள் இயக்கம் வருகிற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 9 மாவட்டங்களில் போட்டியிடுகிறது.
இதற்கான முடிவை புஸ்ஸி ஆனந்த் எடுத்திருக்கிறார். சென்னை பனையூரில் இருக்கிற இயக்க அலுவலகத்தில் 20 மாவட்ட செயலாளர்களுடன் கூட்டம் நடந்திருக்கிறது. கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் பிரியாணி விருந்து.
மதுரை தங்கபாண்டி ,திருச்சி .செந்தில் ,கடலூர் சீனு, வேலூர் வேல்முருகன், தஞ்சாவூர் சரவணன் ,காஞ்சிபுரம் தென்னரசு, கோவை பாபு, ராணிப்பேட்டை மோகன், கிருஷ்ணகிரி வடிவேலு, திருவள்ளுர் விஜய்குமார், விழுப்புரம் பரணிபாலாஜி ஆகிய செயலாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களிடம் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட நிலவரம் கேட்டறிந்து இருக்கிறார்.
9 மாவட்டங்களில் நடக்க இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் இயக்க வேட்பாளர்களை சுயேச்சையாக போட்டியிடும்படி சொல்லியிருக்கிறார்.
இதற்கு தளபதி விஜய் அனுமதி அளித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.
பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னிச்சையாக எடுத்த முடிவா ,அல்லது தளபதி விஜய்யுடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவா என்பது தெரியவில்லை.












