
இந்த சண்டை இதில் முடியுமோ தெரியவில்லை. இப்போது நீதி மன்றம் வரை சென்றிருக்கிறது.
அதாங்க அப்பா சந்திரசேகர் -மகன் விஜய் ஆகியோருக்கிடையில் உருவாக்கப்பட்ட சண்டை.!
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சியை அப்பா தொடங்கினார். தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபா ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இதற்கு விஜய் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது..
“தன்னுடைய பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்குத் தொடர்ந்தார் .
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரான எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா சேகர், உள்ளிட்டோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.
எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகாதரால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.












