ஒய் நாட் ஸ்டுடியோவின் ஒரு அங்கமான YNOTX, கதையம்சம் இருக்கிற திரைப்படங்களை சந்தைப்படுத்தி விநியோகிப்பதில் சிறந்து விளங்குகிறது. ‘கடைசீல பிரியாணி’ எனும் கிரைம்-நகைச்சுவை படத்தைவெளியிடப்போகிறார்கள்.
இது குறித்து எஸ் .சசிகாந்த் கூறுகையில், “சூப்பர் டீலக்ஸ், பக்கிரி, கேடி மற்றும் வானம் கொட்டட்டும் போன்ற படங்களை தொடர்ந்து, சுயாதீனமாக தயாரிக்கப்பட்ட ‘கடைசீல பிரியாணி’ கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் நிஷாந்த் கலிதிண்டி கவனிக்கப்பட வேண்டிய ஒரு திறமைசாலி ஆவார். மேலும், மிக பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு இந்த படம் தகுதியானது, அதை திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.
நிஷாந்த் கலிதிண்டி (இயக்குநர்) கூறுகையில் – “பழிவாங்குவதற்காக கேரளாவுக்குச் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பற்றிய கதை தான் ‘கடைசீல பிரியாணி’. இந்த தமிழ் படம் கேரளாவில் உள்ள அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் வெளியான முந்தைய படங்களைப் போலல்லாமல், இது ஒரு தனித்துவமான சுவாரசியமான கதையுடன் கூடிய படமாக இருக்கும்.”
ஒய் நாட் ஸ்டுடியோவின் ஒரு அங்கமான YNOTX, கதையம்சம் இருக்கிற திரைப்படங்களை சந்தைப்படுத்தி விநியோகிப்பதில் சிறந்து விளங்குகிறது. ‘கடைசீல பிரியாணி’ எனும் கிரைம்-நகை