
சரிகம அன்ட் நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ரக்ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” என்கிற ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர்.
இப்பாடலின் அறிமுக விழாவில் இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அனைவர் முன்னிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா இப்பாடலை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் சரிகம நிறுவனம் சார்பாக பி.ஆர் . விஜயலக்ஷ்மி பேசியதாவது
“இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமைமிக்கது எங்களின் நிறுவனம் . இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். புதிதாக சரிகம ஒரிஜினல்ஸ் எனும் அமைப்பு மூலம், தற்போது புதிய இசை திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். முன்பு ஒரு நிகழச்சிக்காக ஏ ஆர் ரஹ்மான் பள்ளியில் இருந்து இந்த குழுவை மும்பைக்கு அழைத்து போயிருந்தோம், அப்போது இவர்கள் செய்த கலாட்டா மறக்க முடியாதது. இப்போது கணேசன் முதலான அதே குழு, முதல் பாடலை செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி. இப்பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
நடிகை ஐஷ்வர்யா பேசியதாவது…
” விஜயலக்ஷ்மி இந்தியாவில் முதல் பெண் கேமராமேனாக இருந்தவர். அவரது இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன் மிகுந்த திறமை வாய்ந்தவர். சுனிதா, ஸ்வஷ்திஸ்டா நன்றாக டான்ஸ் ஆடுவார்கள் என்று தெரியும், ஆனால் பாட்டை பார்த்த பிறகு தான் ரக்ஷனுக்கு இந்த அளவு ஆடத்தெரியும் என்பது தெரிந்தது. எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். பாடல் அற்புதமாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.”
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியதாவது
சரிகம நிறுவனம் இந்தியாவில் முன்னணியில் உள்ள இசை நிறுவனம். அவர்கள் இப்போது தென்னிந்தியாவில் கால் பதித்து, புதிய படைப்புகளை தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது தனியான பாடல் ஆல்பங்கள் தான் நிறைய ஹிட்டாகி வருகிறது. நிறைய இளம் திறமையாளர்கள் அதன் மூலம் அறிமுகமாகி வருகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் இப்பாடல்கள் பெருமளவில் வரவேற்பை குவிக்கின்றன. இந்த பாடலை மிக அழகாக உருவாக்கியுள்ளார்கள் மாடர்னான பாடலில், அனைத்து ரசிகர்களையும் கவர, GP முத்துவை ஆட வைத்ததை பார்க்க, நன்றாக இருந்தது. இது ஒரு நல்ல முயற்சி இன்னும் பல ஆல்பங்கள் இது போல் வர வேண்டும். இப்பாடல் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்”
எஸ் .கணேசன் இசையமைத்துள்ள பாடலை, ராஜா எழுதியுள்ளார். பென்னி தயாள், விருஷா ஆகியோர் பாடியுள்ளனர். அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.












