
டாக்டர் —படத்தின் முன்னோட்டம் 5 மில்லியனை கடந்து விட்டது.
சிவகார்த்திகேயனின் படம் என்றால் இளவட்டங்களின் மத்தியில் மகிழ்ச்சி பொங்கி வழியும்.
கதைக்கு கதை ,காமெடிக்கு காமடி என கலந்து கட்டி அடிக்கும் அவரது படம்..
சர்க்கரை பொங்கல் ,வெண்பொங்கல் ,புளியோதரை என பலவகை சித்ரான்னங்கள் வளைகாப்பின் போது வைப்பார்கள். அது போல சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படமும் வளைகாப்பு நிகழ்வு மாதிரிதான்.!
டாக்டர் படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தபோது சிவாவின் நடிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை உணர முடிந்தது. ஒரு கட்டத்தில் அவரின் முகம் முழுக்க ரத்தம்.! தன்னை டாக்டராக சொல்லும் அவர் யோகிபாபுவிடம் “உங்க கிட்ட எடுத்த கிட்னியை திரும்பவும் வச்சிருவேன் “னு சொன்னதும் நமக்கு அதிர்ச்சி .அமைதியுடன் ஓடிய நதி அருவியாகிற போது எழும் ஓசை !
இது சீரியஸான டோனில் இருந்தாலும் காமெடியா இருக்குமோ என்கிற சந்தேகம் வராமலும் இல்லை.! “லூசு” என்ற பின் இடைவெளி விட்டு “பையன்” என யோகிபாபு முடிக்கிறபோது திகைப்புதான் வருகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சாரே ..சஸ்பென்ஸ் எகிறுது….!படம் எப்ப வரும்கிற எதிர்பார்ப்பு ஜுரமானியையும் கடந்து போகுது.!
“நீ அந்தம்மாவின் புருசனுமில்ல,இந்தம்மா ,அந்தம்மாவின் அண்ணியும் இல்ல .ஒரு குடும்பமா நடிச்சு எங்கள கிட்நாப் பண்ணிட்டிருக்கீங்க.”என்கிற வசனத்தைத் தொடர்ந்து வருகின்ற பைட்டுகள் ,தீபாவின் பரிதாப முகம் ,இதெல்லாம் எதிர்பாராத திருப்பங்களாக இருக்கும் என நம்புகிறோம்.
“நான்தான் கமாண்டர் ..நீங்கள்லாம் சோல்ஜர்ஸ் ” என சிவகார்த்திகேயன் சொல்லுகிற பாணியில் இருந்து அவர் வில்லன் கோஷ்டிக்கு தலைவராக இருக்கிறார் என்பது எங்கள் யூகம் ,சரியா இயக்குநர் சாரே!
ஏன்னா “அந்தப்பொண்ணுங்களின் ஒர்த் 50 கோடின்னு “கணக்கு சொல்றாரே!












