Monday, September 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

டாக்டர். ( விமர்சனம்.) இத பாக்கலேன்னா வேற எத பார்ப்பீங்க ?

admin by admin
October 11, 2021
in Reviews
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகார்த்திகேயன் – ( வருண்,)பிரியங்கா மோகன் – (பத்மினி),வினய் ராய் (- டெ ர்ரி,)யோகி பாபு – (பிரதாப்),இளவரசு -( கதாநாயகியின் தந்தை)

You might also like

‘பீப்’ – விமர்சனம்!

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

அர்ச்சனா(-நாயகியின் அண்ணி), ஜாரா ( சின்னு) ,அருண் அலெக்சாண்டர் – நவநீ, சுனில் ரெட்டி (மஹாலி),தீபா ( ப்ரீத்தி), ரெடின் கிங்ஸ்லி(பகத் ), மிலிந்த் சோமன்( கர்னல்)
#######################
இயக்குனர்: நெல்சன், இசை : அனிருத், ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
படத்ததொகுப்பு : ஆர்.நிர்மல், பாடல்கள்: சிவகார்த்திகேயன், மோகன் ராஜன்
நடன இயக்குனர்: ஜானி மாஸ்டர்
ஸ்டண்ட்: அன்பரிவ்
****************************************

வயதுக்கு வராத பெண்களை கடத்தி ,அவர்கள் வயதுக்கு வந்ததும் வெளிநாட்டுக்கு கடத்துகிற கொலை பாதக கொடியவர்களை பற்றிய கதை. நாயகன் சிவகார்த்திகேயன் நடிப்பதுடன், கவிஞராகவும் மாறியிருக்கிறார்.

தண்ணியோ ,வென்னியோ  சரக்கில் கலந்தடிப்பதற்குப் பதிலாக காக்டெயிலாக வித்தியாசமாக அடிப்பது ராஜபோதையாகத்தான் இருக்கும் என்கிறார் ஒரு சீனியர் ட்ரங்க்கர்ட் ! அந்த மாதிரியான ஒரு முயற்சியோ என்னவோ காமடி ப்ளஸ் சீரியஸ் என கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

ராணுவத்தில் டாக்டராக இருந்தவர் சிவகார்த்திகேயன். சற்று இறுக்கமான முகம்.அதை காலர் பட்டனில் காட்டியிருக்கிறார் .இயக்குநர் டச் . “இந்த மாதிரிதான் பட்டன்  போடுவீங்களா ?” நாயகி கேட்க “போட்டுக்கத் தானே பட்டன் வச்சிருக்காங்க  ?”என நாயகன் பதிலளிப்பது அந்த கேரக்டரின் தன்மையை எதிரொலிக்கிறது.

இந்த மாதிரி அம்மாஞ்சி நமக்கு சரிப்பட்டு வரமாட்டான் என்கிற முடிவுக்கு நாயகி பிரியங்கா  மோகன் வர ,விளக்கம் கேட்க நாயகியின் வீட்டுக்கு கிளம்புகிறார் நாயகன்.அங்கேதான் கதையின் மையக்கருத்துக்கு டிராவல் ஆகிறோம்.நாயகியின் அண்ணனின் மகள் (10 வயது.) காணாமல் போய்விடுகிறாள்  என்கிற சேதி கிடைக்கிறது..அவளைக்கண்டு பிடிக்கிற  முயற்சியில் நாயகன் இறங்குகிறார். நாயகன் வெற்றி பெறாமல் தமிழ்ச்சினிமாவில் என்றைக்கு வில்லன் பெற்று  பெற்றிருக்கிறான்? அந்த வெற்றி எப்படி கிடைத்தது,விளக்கமாக ,வித்தியாசமாக சொல்லுவதற்கு நெல்சன் முயற்சி செய்திருக்கிறார்.அதில் அவர் வெற்றி பெற்றுள்ளாரா? இதுதான் டாக்டர்.!

அனிருத்தின் பின்னணி இசை அதிரடியான  காட்சிகளுக்கு துணை நிற்கிறது.

இதற்கு முன்னர் பார்த்திராத சிவகார்த்திகேயன். மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் சிரித்த முகத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? நம்ம ஆளும் அதே டைப். சிரிப்பதே  இல்ல.! வேறு பட்ட கேரக்டர்.ஆனால் அவர் பேசுகிற பேச்சில் காமடி இல்லாமல் சில காட்சிகள் இல்லை. அழுத்தமான ,சக்தியுள்ள வசனங்கள்.!ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு செம தீனி.!

நாயகியின் பொய்யான முகமூடித்தனத்தை சுட்டிக்காட்டுகிற சிவகார்த்திகேயனின் குத்தல் நவயுக நாரிமணிகளுக்கு நல்ல படிப்பினை.! வில்லன் வினீத்திடம் டீல் பேசுகிற காட்சியில் வேறு சிவாவை பார்க்கிறோம்.

வினய் ,  வில்லன் என்பதை எதிர்பார்க்கவில்லை.வித்தியாசமாக இருந்தது.எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்துவதுதான் சிறந்த நடிகனுக்கு அழகு. அது வினய்யிடம் அதிகம்.!

கைத்தடியாக இல்லாவிட்டாலும் கூடவே போலீசின் நண்பர் படையில் ஒருவராக வருகிற ரெடின் அவரது முட்டை கண்களுடன் பண்ணுகிற சி.ஐ.டி.வேலைகள் தளர்வு ஏற்படுகிற போதெல்லாம் காமடி டிரிங்சாக இருக்கிறது. சிகாவுக்கு  ரெடின்னால் பிரச்னை என்றால் அது ரசிகர்களுக்கு ஜாலியாக இருந்து விடுகிறது.வசனம் பேசி முடித்ததும் சில வினாடிகள் அலிபாபாவின் குகை மாதிரி அவரது திருவாய் மூடுவதில்லை. மேனரிசம்.?!

அடுத்து யோகிபாபு…. வடிவேலு ,விவேக் இருவரும் இல்லாத குறையை இந்த சிகையரசன் போக்கிவருகிறார் கோலிவுட்டில்.! .சுந்தரவனக்காட்டினை சுமந்து கொண்டிருக்கிற இவரை பயன்படுத்த தெரிந்தவர்களால் மட்டுமே நடிப்பை வாங்க முடியும். நெல்சன் திறமைசாலி.!

முடிந்தால் ,முயற்சித்தால் ,ஆச்சியின் அடுத்த இடத்தை நோக்கி தீபாவினால் நகரமுடியும். குறைந்த பட்சம் காந்திமதி அக்காவின்  இடத்தையாவது பிடித்து விடலாம் தீபா.!! இவரை செலெக்ட் செய்திருந்த கேஸ்டிங் இயக்குனரை பாராட்டலாம்.

லாஜிக்கே இல்லாமல் ஒரு கதையை கொண்டு போவதென்றால் ஒளிப்பதிவு ,வெட்டிவிட்டு இணைக்கும் எடிட்டிங் இந்த இரண்டுமே முக்கியம் என்பதை அனிருத்தை தவிர்த்து சொல்லவைத்திருக்கிறார் டாக்டர்.

கேமராமேன் விஜய்கார்த்திக் கண்ணன் ,எடிட்டர் ஆர் நிர்மல் இருவரும் அதை நிரூபித்திருக்கிறார்கள். கதையும் காட்சிகளும்தான் முக்கியம் கோவாவின் அழகினை வெளிப்படுத்தும் அவசியமில்லை என்பதால் போர்த்துக்கீசிய கோட்டையின் எழிலை மட்டும் படமாக்கியது மாண்பு. உச்ச கட்ட காட்சியில் வன்மையின் உக்கிரம் எந்த அளவு இருந்தால் டாக்டரை காப்பாற்ற முடியுமோ அந்த அளவுக்கு காட்சிப் படுத்தி இருக்கிறார்கள் . கர்னலாக வந்த மிலிந் சோமன் சீனியர் சிட்டிசனாகிவிட்டாலும் அந்த கம்பீரம் ,உடல்வாகு நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.!

பீஸ்ட்டை  இந்த டாக்டர் அளவுக்காவது காட்டினால்தான் வேலைக்காகும் .டாக்டரில்  தனி மனித துதி இல்லை.

டாக்டர் பார்க்க வேண்டியவர்.!!

 

 

 

 

Tags: இளவரசுசிவகார்த்திகேயன்டாக்டர்தீபாநிர்மல்நெல்சன்யோகிபாபுரெடின்விஜய்கார்த்தி மோகன்
admin

admin

Related Posts

‘பீப்’ – விமர்சனம்!
Reviews

‘பீப்’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘சண்டக்காரி’ – விமர்சனம்!
Reviews

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!
Reviews

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

by admin
September 20, 2026
‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!
Reviews

‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!

by admin
September 19, 2026
சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.
Reviews

சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.

by admin
September 19, 2026

Recent News

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!

September 20, 2026
ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

September 20, 2026
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

September 19, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?