
நயன்தாராவுக்கு தெலுங்கில் அதிக சம்பளம்….இரண்டு ஆச்சரியக்குறிகள்.! தங்கச்சி கேரக்டருக்கு இம்புட்டு கோடியா? மூன்று ஆச்சரியக்குறிகள்.!
கொடுக்கிறவன் கொடுத்தால் வேணாம்டா ராஜான்னு கையை மூடிக்கிறவனை இந்த நாட்டுல பார்க்க முடியுமா? இந்திய அரசியல் நம்மளை அப்படியா வளர்த்திருக்கு? முடிஞ்சா மொத்தமா மொட்டை அடிக்கிறதுதானே மேன்மை!
சரிய்யா மேட்டருக்குள்ள வா!
மோகன்லாலின் லூசிபர் படத்தை தெலுங்கில் காட் பாதர் என்கிற பெயரில் படமாக்குகிறார் ,சிரஞ்சீவி. இந்த படத்தில்தான் நயன்தாரா நடிக்கிறார்.
இந்த முக்கியமான செய்தியை அந்த அம்மையாரின் பிறந்த திருநாளன்று வெளியிட்டு கவுரவம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிப்பதற்கு அவ்வளவு சுலபத்தில் ஒத்துக்கொள்ளவில்லையாம் .நயன்.!சிரஞ்சீவியின் சகோதரியாக நடிப்பதற்கு அவர் பெற்ற தொகை 4 கோடி என்கிறார்கள்.
தெலுங்கு பட ஹீரோயினாக நடிப்பதற்கு பூஜா ஹெக்டே பெறுகிற சம்பளம் 3 கோடி என்பதாக அவர்களே கூடுதல் தகவல் கொடுப்பதுதான் …ஆச்சரியம்.!












